இரவில் வெளிச்சமே தெரியல... தினம் தினம் கிரகணம்
கரடு முரடு ரோடு
மதுக்கரை, அரசு மருத்துவமனை வழியாக பைபாஸ் செல்லும், 26வது வார்டு, முல்லை நகர் பிரதான சாலை சேதமடைந்துள்ளது. பைபாஸ் சாலை ஏறும் பகுதியில் தார் முழுவதும் பெயர்ந்து, கரடு, முரடாக உள்ளது. வாகனங்கள் ஏறவும், இறங்கவும் சிரமமாக உள்ளது. பிரதான சாலையாக இருப்பதால் விரைந்து சீரமைத்து தர வேண்டும்.- கார்த்திக், மதுக்கரை. தினமும் கிரகணம்
பி.என்.,பாளையம், 48வது வார்டு, ஜி.கே.எஸ்., நகரில், பெரிய மரங்களின் கிளைகள் மின் கம்ப ஒயர்களில்உரசியபடி உள்ளது. மேலும், தெருவிளக்கை மூடியபடி கிளைகள் வளர்ந்துள்ளதால், இரவில் வெளிச்சமே தெரியவில்லை. ஒயர்களில் உரசும் கிளைகளை வெட்டி அகற்ற வேண்டும்.- சத்யநாராயணன், பி.என்.,பாளையம். சேறும், சகதியும்
சுண்டக்காமுத்துார், குறிஞ்சி நகருக்கு, தார் சாலை அமைக்க பலமுறை வலியுறுத்தியும் நடவடிக்கை இல்லை. மண் சாலையில் மழைநீர் தேங்கி சேறும், சகதியுமாக உள்ளது. வாகனங்கள் செல்லவும், நடக்கவும் மிகவும் சிரமமாக உள்ளது. தற்போது மண்ணையாவது கொட்டி சீரமைக்க வேண்டும்.- தனலட்சுமி, சுண்டக்காமுத்துார். சாலையில் 'குளங்கள்'
வெள்ளலுார், மருதுார், அசோகர் வீதியில், திருவாதிரை எஸ்.எஸ்.,நகர் பகுதியில் சாலையில் உள்ள பெரிய, பெரிய பள்ளங் களில் குளம் போல தண்ணீர் தேங்கி நிற்கிறது. தண்ணீர் மூடி, குழிகள் தெரியாததால் வாகன ஓட்டிகள் விபத் தில் சிக்குகின்றனர்.- சேவியர், வெள்ளலுார். கம்பி தெரியும் கம்பம்
சூலுார், போகம்பட்டி, பொன்னாக்காணி மெயின் ரோட்டில் கடந்த இரண்டு மாதங்களாக மின்கம்பம் சேதமடைந்துள்ளது.கான்கிரீட் பெயர்ந்து கம்பிகள் வெளியே தெரியும்படி உள்ளது. ஒருபக்கம் சாய்ந்தபடி இருக்கும் கம்பம், பலத்த மழை காற்றில் விழுவதற்கு வாய்ப்புள்ளது. அசம்பாவிதங்கள் நிகழும் முன் கம்பத்தை மாற்ற வேண்டும்.- பிரியா, சூலுார் சாகச பயணம்
துடியலுார், வி.ஆர்.வி., அவென்யூ, ஒன்றாவது வார்டு, வளர்மதி நகர் பின்புறம் மண் சாலையை மழைக்காலத்தில் பயன்படுத்தவே முடியவில்லை. சகதியாக இருப்பதுடன், ஆங்காங்கே தண்ணீர் தேங்கி நிற்கிறது. வாகனஓட்டிகள் தினமும் சேற்றில்வழுக்கி விழுகின்றனர். சாலையில் கால் வைக்கவே முடியவில்லை.- சாந்தி, துடியலுார். கால்வாயில் பாட்டில்கள்
கணபதி, சத்தி ரோடு, 19 வது வார்டு, ஜானகி நகரில், வாய்க்காலில் பிளாஸ்டிக் பாட்டில்கள் அதிகளவு அடைத்துள்ளது. இதனால், கழிவுநீர் தேங்கியுள்ளது. மழை தீவிரமடையும் போது கால்வாயில் தண்ணீர் செல்ல வழியில்லை. பிளாஸ்டிக் பாட்டில்கள், மரக்கிளைகளை அகற்றி சுத்தம் செய்யவேண்டும்.- அன்பு, கணபதி. சாலையெல்லாம் பள்ளம்
பீளமேடு, வி.கே. ரோடு, பள்ளத்தின் முடியும் பகுதியில் சாலையில் பெரிய பள்ளம் உள்ளது. இதேபால், சாலையின் பல இடங்களிலும், பீளமேடு முதல் பயனீர் மில் சாலையிலும் பள்ளங்களில் மழைநீர் நிரம்பி நிற்கிறது. விபத்துகளால் உயிரிழப்புகள் நிகழும் முன், விரைந்து சாலையை சீரமைக்க வேண்டும்.- கதிர்வேல், பீளமேடு. சேற்றில் சிக்கும் வாகனங்கள்
ஒண்டிப்புதுார், பட்டணம், இட்டேரி ரோட்டில் அமைந்துள்ள 'ஸ்பிரிங் பீல்டு ரிவேரா' குடியிருப்பு பகுதியில் 120 வீடுகள் உள்ளன. இப்பகுதியின் முக்கிய சாலை முழுவதும் பள்ளங்களாக உள்ளது. மண் சாலையில் மழைநீர் தேங்கி நிற்பதால், வாகனங்களின் சக்கரங்கள் அடிக்கடி சிக்கிக்கொள்கின்றன.- சேதுராமன், ஒண்டிப்புதுார். மழையில் கரைந்த சாலை
கோவை மாநகராட்சி, 98வது வார்டு, இ.பி.காலனி பகுதியில், சாரதாமில் ரோட்டில், கதிர் சிப்ஸ் கடை முதல் முத்தையா நகர் ரோடு வரை சாலை, சேதமடைந்துள்ளது. புகாருக்கு பின் போடப்பட்ட சாலை ஒரு மழைக்கே முற்றிலுமாக சேதமடைந்துவிட்டது. குழிகளை சீரமைத்து தரமான முறையில் சாலை அமைக்க வேண்டும்.- சாமுவேல், போத்தனுார்.