மேலும் செய்திகள்
சிறு விளையாட்டு அரங்கத்துக்கு அடிக்கல்
06-May-2025
கோடை விடுமுறையில் வீட்டில் டிவி, மொபைல் போனில் பொழுதை கழிக்கும் கோவைவாசிகளுக்கு, இனி கவலை இல்லை.வ.உ.சி., மைதானத்தில் அரசு பொருட்காட்சி துவங்கி விட்டது. இந்த பொருட்காட்சியில், தமிழக அரசு துறைகளை சேர்ந்த, 24 அரங்குகள், தனியார் அரங்கங்கள், விளையாட்டு அரங்கங்கள், உணவு அரங்கங்கள் என, 50க்கும் மேற்பட்ட அரங்கங்கள் அமைக்கப்பட்டுள்ளன.அரசு பொருட்காட்சி என்றாலே, குழந்தைகளை கவர்ந்து இழுப்பது ராட்டினங்கள்தான். ஜெயின்ட் வீல், ரோலர் சர்க்கிள் உள்ளிட்ட, 10க்கும் மேற்பட்ட ராட்டினங்கள் உள்ளன.குழந்தைகளுக்கு என, பந்து குவியல் அரங்கு, மிக்கி மவுஸ் சறுக்கு விளையாட்டு, சீப், கார், பைக் ரைடிங் என, இந்த பொருட்காட்சியில், குழந்தைகளை குதுாகலப்படுத்த ஏராளமான ஈவன்ட்கள் உள்ளன.சில்லென்று ஐஸ் மழை பொழியும் ஸ்நோ அரங்கில், ஐஸ் மழையில் நனைந்தபடி நடனம் ஆடி மகிழ்ச்சி அடையலாம். விதவிதமான உணவுகள், ஸ்நாக்ஸ்க்கும் குறைவில்லை.பொருட்காட்சி நிர்வாகிகள் கூறுகையில், 'தினமும் 4000 முதல் 5000 பார்வையாளர்கள் பொருட்காட்சியை பார்வையிடுகின்றனர். சனி, ஞாயிறு நாட்களில் 8,000க்கும் மேற்பட்டவர்கள் பார்வையிட்டுள்ளனர்' என்றனர்.நுழைவுக் கட்டணமாக பெரியவர்களுக்கு 15 ரூபாய், குழந்தைகளுக்கு 10 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. தினமும் மாலை 4:00 முதல் இரவு 10:00 மணி வரை பொருட்காட்சியை பார்வையிடலாம்.
06-May-2025