உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கல்வி நிறுவனங்களில் கட்சி நிகழ்ச்சி கூடாது

கல்வி நிறுவனங்களில் கட்சி நிகழ்ச்சி கூடாது

கோவை : ''தனியார் பள்ளி, கல்லுாரி வளாகங்களில், அரசியல் கட்சியினர் நிகழ்ச்சிகள் நடத்துவது வன்மையாக கண்டிக்கத்தக்கது,'' என, மறுமலர்ச்சி மக்கள் இயக்க தலைவர் ஈஸ்வரன் தெரிவித்துள்ளார்.அவரது அறிக்கை:அரசியல் கட்சி நிகழ்ச்சிகள், தனிப்பட்ட இயக்கங்களின் நிகழ்ச்சிகள் போன்றவை, கல்லுாரி வளாகங்களில் நடக்கும் போது, தொடர்ந்து எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது.சமீபத்தில், அரசுப் பள்ளியில் தி.மு.க., நடத்த இருந்த, கபடி போட்டி எங்களது எதிர்ப்பின் காரணமாக கைவிடப்பட்டது. தனியார் பள்ளி, கல்லுாரி வளாகங்களில், அரசியல் கட்சியினர் நிகழ்ச்சிகள் நடத்துவது, வன்மையாக கண்டிக்கத்தக்கது.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை