உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பரப்புரையாளர்களுக்கு சம்பளம் வழங்கவில்லை

பரப்புரையாளர்களுக்கு சம்பளம் வழங்கவில்லை

வால்பாறை; வால்பாறை, நகராட்சியில் நான்கு மாதங்களாக சம்பளம் வழங்காததால், பரப்புரையாளர்கள் தவிக்கின்றனர்.வால்பாறை நகராட்சியில் துாய்மை இந்தியா திட்டத்தின் கீழ், 30 நிரந்தர துாய்மை பணியாளர்கள், 44 தற்காலிக பணியாளர்கள், 30 கொசு ஒழிப்பு பணியாளர்கள் பணியாற்றுகின்றனர்.இது தவிர, ஆறு பேர் பரப்புரையாளர்களாக பணிபுரிந்து வருகின்றனர். ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் இவர்களுக்கு மாதம் தோறும் வங்கி கணக்கு வாயிலாக சம்பளம் வழங்கப்படுகிறது.இந்நிலையில், பரப்புரையாளர்களுக்கு மட்டும் கடந்த நான்கு மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை. இதனால், அவர்கள் அவதிப்படுகின்றனர்.வால்பாறை நகராட்சி சுகாதார அலுவலர் செந்தில்குமாரிடம் கேட்ட போது, ''வங்கி பண பரிமாற்றத்தில் ஏற்பட்ட பிரச்னையால், பரப்புரையாளர்களுக்கு உரிய நேரத்தில் சம்பளம் வழங்கப்படவில்லை. விரைவில் அவர்களுக்கு சம்பளம் வழங்க சம்பந்தப்பட்ட வங்கி அதிகாரிகளிடம் பேசி தீர்வு காணப்படும்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை