வேண்டாம் போதை விழிப்புணர்வு
பொள்ளாச்சி; பொள்ளாச்சி கம்பன் கலை மன்றம் சார்பில் 'வேண்டாம் போதை' என்ற தலைப்பில் குழந்தைகள் தினம் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியில், போடிபாளையம், பொங்காளியூர், ஒடையகுளம் அரசு நடுநிலைப் பள்ளி, புளியம்பட்டி, பெத்தநாயக்கனுார் அரசு உயர்நிலைப் பள்ளி, நகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர்.தொடர்ந்து, சியாம், சுபஸ்ரீ ஆகியோரின் நாதஸ்வர இசையும், அனுஷகாஸ்ரீயின் நாட்டிய நிகழ்ச்சியும் இடம்பெற்றது. போதையால் ஏற்படும் விளைவுகள் குறித்து பேச்சு, கவிதை, பாடல், தனிநபர் நடிப்பு, நடனம் மற்றும் வில்லுப்பாட்டு வாயிலாக மாணவர்கள் விளக்கினர்.தவிர, 'போதை ஒழிப்பில் பெரும்பங்கு ஆற்ற வேண்டியது குடும்பமா? சமூகமா?' என்ற தலைப்பில் பட்டிமன்றமும் இடம்பெற்றது. கவிஞர் சாய்ஹர்ஷினி நடுவராகவும், குடும்பமே என்ற தலைப்பில் கவிஞர் அபிஷாதேவி, சமூகமே என்ற தலைப்பில் கவிஞர் சபரிகிரியும் பேசினர்.இதற்கான ஏற்பாடுகளை, மன்றத் தலைவர் சண்முகம், செயலாளர் சிவக்குமார், நிர்வாகிகள் குமார், பாலமுருகன், காளிமுத்து, ரவீந்திரன் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.