உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / 3 கிலோ கஞ்சா கடத்தல்; வடமாநில நபருக்கு சிறை

3 கிலோ கஞ்சா கடத்தல்; வடமாநில நபருக்கு சிறை

கோவை; விற்பனைக்காக மூன்று கிலோ கஞ்சா கடத்தி வந்த, வடமாநில நபரை போலீசார் சிறையில் அடைத்தனர். கோவை ரயில்வே ஸ்டேஷன் முதல் பிளாட்பாரத்தில், போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, பிளாட்பாரத்தில் சந்தேகத்துக்கு இடமான வகையில் வடமாநில நபர் நின்றிருந்தார். அவரது உடமைகளை சோதித்த போது, அதில் கஞ்சா இருந்தது. விசாரணையில் அவர் மேற்குவங்கம், மோலாபுகாரியாவை சேர்ந்த தரிக்குல்லாஸ்கர், 43 எனத் தெரிந்தது. விற்பனைக்காக மேற்கு வங்கத்தில் இருந்து கஞ்சாவை கடத்தி வந்தது தெரிந்தது. அவரை போலீசார் சிறையில் அடைத்தனர். அவரிடமிருந்து மூன்று கிலோ கஞ்சா, எடை எந்திரம் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை