உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ரோட்டோரத்தில் நிறுத்தும் வாகனங்களால் தொல்லை

ரோட்டோரத்தில் நிறுத்தும் வாகனங்களால் தொல்லை

பொள்ளாச்சி; பொள்ளாச்சி --- பாலக்காடு ரோட்டில், தினமும் ஆயிரக்கணக்கில் வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த ரோட்டின் ஓரத்தில், அதிகளவு டாக்சிகள், டூரிஸ்ட் வாகனங்கள் மற்றும் கேரளா செல்லும் கோழி வண்டிகள் 'பார்க்கிங்' செய்யப்படுகின்றன.இதனால், ரோட்டில் பயணிக்கும் வாகன ஓட்டுநர்களுக்கு அவ்வப்போது சிரமம் ஏற்படுகிறது. இதுமட்டுமின்றி, காலை மற்றும் இரவு நேரத்தில் இங்கு 'பார்க்கிங்' செய்யப்படும் வாகனங்களின் மறைவில், சிலர் அமர்ந்து மது அருந்துகின்றனர்.மேலும், ஆங்காங்கே மது பாட்டில்களை வீசி செல்வதுடன், சில நேரங்களில் வாகன ஓட்டுநர்களுடன் ரகளையிலும் ஈடுபடுகின்றனர். இதனால், மற்ற வாகன ஓட்டுநர்கள் அச்சத்துடன் பயணிக்கின்றனர்.எனவே, இந்த ரோட்டில் வாகனங்கள் 'பார்க்கிங்' செய்வதை தவிர்க்க, போலீசார் சார்பில் அறிவிப்பு வைக்க வேண்டும். இரவு நேரத்தில் அவ்வப்போது ரோந்து பணியில் ஈடுபட்டு, அத்துமீறுவோர் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என, வாகன ஓட்டுநர்கள் வலியுறுத்துகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ