உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கருப்பு பேட்ஜ் அணிந்து செவிலியர் போராட்டம்

கருப்பு பேட்ஜ் அணிந்து செவிலியர் போராட்டம்

கோவை; சமவேலை சம ஊதியம் உள்ளிட்ட முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து, தொகுப்பூதிய பணியில் உள்ள செவிலியர் நேற்று, கருப்பு பேட்ஜ் அணிந்து பணிகளில் ஈடுபட்டனர். 2015ம் ஆண்டு மருத்துவ பணியாளர்கள் தேர்வு வாரியத்தின் போட்டி தேர்வின் வாயிலாக, அரசு மருத்துவமனைகளுக்கு செவிலியர் நியமிக்கப்பட்டனர். காலமுறை ஊதியத்தில் இரண்டு ஆண்டுகளில் நியமிக்கப்படுவார்கள் என்றே பணி ஆணை வழங்கப்பட்டது. ஆனால், முழுமையாக வழங்கப்படவில்லை. பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, பிரசார இயக்கத்தில் கடந்த மாதம் ஈடுபட்டனர். தொடர்ந்து, நேற்று கருப்பு பேட்ஜ் அணிந்துகொண்டு, வழக்கமான பணிகளில் ஈடுபட்டனர். கோவை அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், மருத்துவமனைகளில் செவிலியர் இப்பேட்ஜ் அணிந்துகொண்டு பணிபுரிந்தனர். தமிழ்நாடு செவிலியர் மேம்பாட்டு சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் சுபின் கூறுகையில், ''அரசு நடவடிக்கை எடுக்காவிடில், தொடர் போராட்டம் மேற்கொள்வோம்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !