உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஜாதிக்காய், பாக்கு வாழைத்தார் ஏலம்

ஜாதிக்காய், பாக்கு வாழைத்தார் ஏலம்

ஆனைமலை ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், ஜாதிக்காய், வாழைக்காய், பாக்கு ஏலம் நடந்தது.ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், பாக்கு, ஜாதிக்காய், வாழைத்தார் ஏலம், கண்காணிப்பாளர் செந்தில்முருகன் தலைமையில் நடந்தது. பாக்கு ஒரு கிலோ குறைந்தபட்சமாக, 124 ரூபாய், அதிகபட்சமாக, 153.25 ரூபாய்க்கு விற்றது.மொத்தம், 10 மூட்டைகளை, இரண்டு விவசாயிகள் கொண்டு வந்தனர்; நான்கு வியாபாரிகள் பங்கேற்றனர்.ஜாதிக்காய், ஒரு கிலோ குறைந்தபட்சமாக, 320 ரூபாய், அதிகபட்சமாக, 360 ரூபாய்க்கும் விற்றது. ஏலத்தில், எட்டு மூட்டையை, ஐந்து விவசாயிகள் கொண்டு வந்தனர். ஆறு வியாபாரிகள் பங்கேற்றனர்.வாழைக்காய், ஒரு கிலோ குறைந்தபட்சமாக, 30 ரூபாய், அதிகபட்சமாக, 35 ரூபாய்க்கு ஏலம் சென்றது. அதில், 15 வாழைத்தார்கள் விற்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ