உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / அகிலம் ஆளும் தாயே... காத்தருள்வாய் நீயே!

அகிலம் ஆளும் தாயே... காத்தருள்வாய் நீயே!

-- நிருபர் குழு -ஆடி மாதம் வெள்ளிகிழமைகளில், கோவில்களில் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடக்கிறது. அம்மனுக்கு கம்பங்கூழ் படைத்தும், மஞ்சள் கயிறு, குங்குமம் வைத்தும் பெண்கள் வழிபட்டனர்.பொள்ளாச்சி, சூலக்கல் மாரியம்மன் கோவிலில், அம்மனுக்கு சிறப்பு அபிேஷகம், அலங்கார பூஜைகள் நடைபெற்றன. சிறப்பு அலங்காரத்தில் அம்மன் அருள்பாலித்தார். பொள்ளாச்சி மாரியம்மன் கோவிலில், அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. கோவில் முன்புள்ள பீடத்தில், உப்பு கொட்டி நேர்த்தி கடன் செலுத்தி பக்தர்கள் வழிபாடு செய்தனர். அம்மனுக்கு வேண்டுதலை நிறைவேற்றிய பக்தர்கள், கூழ் வழங்கி வழிபாடு செய்தனர்.ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில், அம்மனுக்கு சிறப்பு அபிேஷகம், அலங்கார பூஜைகள் நடைபெற்றன. ஆனைமலை ஸ்ரீதேவி, பூதேவி சமேத ரங்கநாத பெருமாள் கோவிலில், ஒன்பது வகையான அபிேஷகம், மலர் மாலைகளால் அலங்கார பூஜைகள் நடைபெற்றன. பக்தர்களுக்கு வளையல், மஞ்சள் கயிறு, மஞ்சள், குங்குமம் உள்ளிட்டவை பிரசாதமாக வழங்கப்பட்டது.

வால்பாறை

வால்பாறை சுப்ரமணிய சுவாமி கோவில் சன்னதியில் நேற்று காலை, 11:00 மணிக்கு துர்க்கை அம்மனுக்கு, சிறப்பு அபிேஷக, அலங்கார பூஜை நடந்தது. பக்தர்களுக்கு குங்குமம், மஞ்சள் கயிறு, வளையல்கள், பிரசாதம் வழங்கப்பட்டது.எம்.ஜி.ஆர்.,நகர் மாரியம்மன்கோவிலில் காலை, 6:00 மணிக்கு கணபதி ேஹாமமும், 7:00 மணிக்கு சிறப்பு, அபிேஷக அலங்கார பூஜை நடைபெற்றது. அண்ணாநகர் முத்துமாரியம்மன் கோவிலில் காலை, 6:30 மணிக்கு சிறப்பு அபிேஷக பூஜையும், அலங்கார பூஜையும் நடந்தது.வாழைத்தோட்டம் காமாட்சியம்மன் கோவிலில் நேற்று மாலை சிறப்பு அபிேஷக பூஜையும், அலங்கார பூஜையும் நடந்தன.

கிணத்துக்கடவு

கிணத்துக்கடவு, சிங்கராம்பாளையம், மாகாளியம்மன் கோவிலில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.கிணத்துக்கடவு பிளேக் மாரியம்மன் கோவிலில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக அலங்கார பூஜைகள் நடந்தது. பக்தர்கள் விளக்குகள் ஏற்றி வழிபாடு செய்தனர். பொன்மலை வேலாயுத சுவாமி கோவிலில் விசாலாட்சி தாயாருக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது.

உடுமலை

ஆடி வெள்ளியை முன்னிட்டு, உடுமலை பகுதியிலுள்ள அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தன. அம்மனுக்கு, பால், தயிர், பன்னீர் , பஞ்சாமிர்தம், இளநீர், தேன், நெய், குங்குமம் என பல்வேறு திரவியங்களில் சிறப்பு அபிேஷகம் மற்றும் அலங்கார பூஜைகள் நடந்தன.அம்மன் கோவில்களில் பக்தி பாடல்களுடன், விளக்கு பூஜை, கூழ் ஊற்றுதல் என பல்வேறு விழாக்களுடன் களை கட்டியது. உடுமலை மாரியம்மன் கோவிலில், நேற்று அதிகாலை அம்மனுக்கு சிறப்பு அபிேஷகம், அலங்கார பூஜை நடந்தது. பெண்கள் பங்கேற்று அம்மனை வழிபட்டனர்.அதே போல், தில்லை நகர் ரத்தினாம்பிகை உடனமர் ரத்தின லிங்கேஸ்வரர் கோவிலில், அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. ருத்தரப்ப நகர் வரசித்தி விநாயகர் கோவிலில் எழுந்தருளியுள்ள துர்க்கையம்மன் கோவில், டி.வி.,பட்டணம் பிளேக் மாரியம்மன் கோவில், தலைகொண்டம்மன் கோவில், திருமூர்த்தி நகர் வன துர்க்கையம்மன் கோவில்களில், சிறப்பு அபிேஷகம், அலங்கார பூஜைகள் நடந்தன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை