உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மிஷின் வெடித்ததில் ஒடிசா தொழிலாளி பலி

மிஷின் வெடித்ததில் ஒடிசா தொழிலாளி பலி

கிணத்துக்கடவு,; கிணத்துக்கடவு, சொலவம்பாளையம் பகுதியில் உள்ள தனியார் கம்பெனியில் பணியாற்றிய வட மாநிலத்தவர் பலியானார்.ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் தபான், 28, கூலி தொழிலாளி. இவர், கிணத்துக்கடவு, சொலவம்பாளையத்தில் உள்ள தனியார் காஸ்டிங் கம்பெனியில் வேலை செய்து வந்தார்.நேற்று முன்தினம் மாலை, தபான் வேலை செய்து கொண்டிருந்த போது, மிஷின் பழுதடைந்து வெடித்ததில், அதன் பாகங்கள் தபான் மீது பட்டு, படுகாயமடைந்தார்.இதை தொடர்ந்து, கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள், வரும் வழியிலேயே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து, கிணத்துக்கடவு போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை