உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / அதிகாரிகளே... பாரபட்சம் வேண்டாம்!

அதிகாரிகளே... பாரபட்சம் வேண்டாம்!

முருகன், நெகமம்: பொதுமக்கள் நடந்து செல்லும் நடைபாதை ஓரத்தில் கடைகள் வைத்திருப்பவர்கள் சிலர், நடைபாதையை ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். கிணத்துக்கடவு பகுதியில் சர்வீஸ் ரோட்டில், நடைபாதையில் ஆக்கிரமிப்பு மற்றும் சில இடங்களில் புதர்கள் சூழ்ந்து காணப்படுகிறது. இதை தேசிய நெடுஞ்சாலை அகற்றாமல் இருப்பதால் மக்கள் இந்த பாதையை உபயோகிப்பதை தவிர்த்து ரோட்டில் நடந்து செல்கின்றனர். ஆக்கிரமிப்பு, புதர் அகற்றி பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும்.முத்துசாமி, வடுகபாளையம்: பொள்ளாச்சி நகரில் வணிக கடைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஆனால், மக்களின் பாதுகாப்பான பயணத்துக்கு எந்த உத்தரவாதமும் இல்லை. நடைபாதை ஆக்கிரமிப்பால், மக்கள், ரோட்டில் நடந்து செல்கின்றனர். பஸ் ஸ்டாண்ட், நியூ ஸ்கீம் ரோடு உள்ளிட்ட அனைத்து ரோடுகளிலும், பாரபட்சமின்றி ஆக்கிரமிப்பை அகற்றி, தடுப்பு கம்பியுடன் கூடிய நடைபாதை அமைக்க வேண்டும். மீண்டும் ஆக்கிரமிப்பு செய்யப்படுவதை தடுக்க, வணிகர் சங்கத்தின் ஒத்துழைப்பும் அவசியம். அவர்களிடையேயும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.சுரேஷ், வால்பாறை: வால்பாறையில், சமீப காலமாக ஆக்கிரமிப்பு கடைகள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக, நடைபாதையை ஆக்கிரமித்து வைக்கப்பட்டுள்ள கடைகளால், மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். துறை சார்ந்த அதிகாரிகள் மனசு வெச்சு பாரபட்சமின்றி ஆக்கிரமிப்புக்களை அகற்ற வேண்டும். ஆக்கிரமிப்பு செய்யும் வியாபாரிகளுக்கு மாற்று இடம் வழங்க வேண்டும். அதன்பிறகும் ஆக்கிரமிப்பு தொடர்ந்தால், கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.மவுனகுருசாமி, உடுமலை: உடுமலை நகரில், நெடுஞ்சாலைத்துறை, நகராட்சி, ஊராட்சிக்கு சொந்தமான பிரதான ரோடுகளில், நடைபாதைகள், மழை நீர் வடிகால் முழுமையாக ஆக்கிரமிக்கப்பட்டு, ரோடுகளே குறுகலாக மாறியுள்ளது.ரோடு ஆக்கிரமிப்பு, வாகனங்கள் 'பார்க்கிங்' போக மீதமுள்ள பகுதியில்,மக்கள் நடந்து செல்வதால், விபத்துகள் அதிகரித்து வருகிறது. போக்குவரத்து நெரிசலும் நிரந்தரமாக உள்ளது.நகராட்சி, நெடுஞ்சாலைத்துறை, போலீசார் என,அரசு அதிகாரிகள் இணைந்து, பாரபட்சமின்றி ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ