பழைய இரும்பு திருடியவர் சிக்கினார்
போத்தனுார்; குறிச்சி, பழனி போயர் வீதியை சேர்ந்தவர் சுரேஷ்பாபு, 59; பழைய இரும்பு, பேப்பர் வாங்கி, விற்பனை செய்கிறார். கடையில் பொருத்தியுள்ள 'சிசி டிவி' கேமரா காட்சிகளை, மொபைல் போன் வாயிலாக பார்க்கும் வசதி செய்திருக்கிறார். நேற்று முன்தினம் அதிகாலை கழிவறைக்குச் செல்ல எழுந்தவர், கடையில் உள்ள கேமரா காட்சிகளை பார்வையிட, மொபைல் போனை பார்த்தார். 'சிசி டிவி' கேமரா ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. தனது மகனுடன், பொள்ளாச்சி தேசிய நெடுஞ்சாலையில் அண்ணா நகரில் உள்ள கடைக்கு சென்றார். மேற்கூரை உடைக்கப்பட்டு, அதிலிருந்து வெளியே வந்தவரை பிடித்தனர். கடைக்கு அருகே ஒரு கார் நிற்பதும், கடையில் திருடப்பட்ட இரும்புகள் இருப்பதும் தெரிந்தது. அந்நபரை, சுந்தராபுரம் போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில், கரும்புக்கடை, ஆசாத் நகர், ஒன்பதாவது வீதியை சேர்ந்த முஹமது ஆஷிக் 26 என்பதும், 150 கிலோ இரும்பை திருடி, காருக்குள் வைத்திருந்ததும் தெரிந்தது. அவரை கைது செய்த போலீசார், இரும்பு பொருட்களை பறிமுதல் செய்தனர்.