உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / போலீஸ் அதிகாரி போல நடித்து மூதாட்டியிடம் ரூ.80 லட்சம் மோசடி

போலீஸ் அதிகாரி போல நடித்து மூதாட்டியிடம் ரூ.80 லட்சம் மோசடி

கோவை : பெங்களூரூவைச் சேர்ந்த, 77 வயது மூதாட்டி, கோவை, கே.என்.ஜி., புதுார் சாய் நகர் தனியார் காப்பகத்தில் வசிக்கிறார். இவரது மொபைல் போனுக்கு டிச., 2ல் ஓர் அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர், தான் உத்தரபிரதேச மாநில போலீஸ் டி.ஜி.பி., என, கூறியுள்ளார்.தொடர்ந்து, அந்த நபர், மூதாட்டியிடம் அவரது ஆதார் கார்டு, பண மோசடிக்கு பயன்படுத்தப்பட்டுஉள்ளதாகவும், வங்கி கணக்குகளின் பண பரிவர்த்தனையை சி.பி.ஐ., போலீசார் சரிபார்க்க வேண்டி உள்ளது எனவும் கூறியுள்ளார். உடனடியாக மூதாட்டியின் வங்கி கணக்கில் உள்ள பணத்தை, தான் கூறும் வங்கி கணக்கிற்கு அனுப்பும் படியும், சரிபார்த்து திருப்பி அனுப்பி விடுவதாகவும் கூறியுள்ளார்.மூதாட்டி, இடையர்பாளையத்தில் உள்ள அந்த வங்கிக்கு சென்று, தன் கணக்கில் உள்ள 80 லட்சம் ரூபாயை இரு தவணைகளாக, நபர் கூறிய வங்கி கணக்கிற்கு அனுப்பினார். பின், அந்த நபர், 'இதுகுறித்து யாரிடமும் தெரிவிக்கக் கூடாது; வெளியே தெரிந்தால் கைது செய்யப்படுவீர்கள்' என, மூதாட்டியிடம் மிரட்டல் விடுத்துள்ளார்.பயந்து போன மூதாட்டி, யாரிடமும் தெரிவிக்காமல் இருந்து வந்தார். வெகு நாட்களாகியும், அவரது பணம் திருப்பி வராததால் அந்த நபர் அழைத்த மொபைல் எண்ணில் தொடர்பு கொண்டார். தொடர்பு கொள்ள முடியவில்லை. சந்தேகமடைந்த மூதாட்டி, பெங்களூருவில் உள்ள தன் உறவினர்களிடம், நடந்த விஷயங்களை கூறினார்.அதிர்ச்சியடைந்த அவர்கள் கோவையில் மூதாட்டியுடன் சென்று போலீசில் புகார் அளித்தனர். கோவை மாநகர சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிந்து, மூதாட்டி பணம் அனுப்பியதாக தெரிவித்த வங்கி கணக்கில் இருந்த 40 லட்சம் ரூபாயை முடக்கி, விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை