உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / வரும் 26ல் கோட்ட அளவில் தபால் குறை தீர்ப்பு கூட்டம்

வரும் 26ல் கோட்ட அளவில் தபால் குறை தீர்ப்பு கூட்டம்

கோவை : கோட்ட அளவிலான தபால் குறை தீர்ப்பு கூட்டம், வரும் 26ம் தேதிநடக்கிறது.கோவை கோட்ட முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் அறிக்கை:கோட்ட அளவிலான தபால் குறை தீர்ப்பு கூட்டம், வரும் 26ம் தேதி காலை 11:00 மணிக்கு, முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் அலுவலகம், கோவை கோட்டம் (கோவை தலைமை தபால் நிலையம் 2வது மாடி) குட்ஷெட் ரோடு அலுவலகத்தில் நடக்கிறது.வாடிக்கையாளர்கள், கோவை கோட்டத்துக்குள் உட்பட்ட தங்களது புகார்களை, 'வாடிக்கையாளர் சேவை மையம், கோட்ட கண்காணிப்பாளர் அலுவலகம், கோவை கோட்டம், குட்ஷெட் தெரு, கோவை 641001' என்ற முகவரிக்கு, வரும் 23ம் தேதிக்குள் கிடைக்குமாறு அனுப்பி வைக்கவும்.பதிவு தபால், விரைவு தபால், பணவிடை தொடர்பான புகார்களில், தபால் பதிவு செய்யப்பட்ட நாள், நேரம், அனுப்புநர் மற்றும் பெறுநர் முழு முகவரி, தபால் பதிவு எண் ஆகியவை குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும்.அஞ்சலக சேமிப்பு கணக்கு, காப்பீடு தொடர்பான புகார்களில், சேமிப்பு கணக்கு எண், காப்பீடு எண், சேமிப்பு கணக்கு வைத்திருப்பவர், காப்பீட்டாளர் பெயர் மற்றும் முகவரி, தபால் அலுவலகத்தின் பெயர், பணப்பிடித்தம் தொடர்பான தகவல்களை குறிப்பிட வேண்டும்.கடிதத்தின் மேலுறையில், 'தபால் குறைதீர்ப்பு கூட்ட புகார்' என்று எழுதப்பட்டிருக்க வேண்டும். தபால் குறை தீர்ப்பு கூட்டத்தில் பங்கேற்க விரும்பும் வாடிக்கையாளர்கள், குறிப்பிட்ட தேதியில் உரிய நேரத்தில் பங்கேற்க வேண்டும்.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை