உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஓணம் சிறப்பு ரயில் அறிவிப்பு

ஓணம் சிறப்பு ரயில் அறிவிப்பு

கோவை; ஓணம் பண்டிகையை முன்னிட்டு, மங்களூரு - பெங்களூரு இடையே சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இவை, போத்தனுார் மற்றும் திருப்பூரில் நின்று செல்லும். வரும் 31ம் தேதி, இரவு 11 மணிக்கு மங்களூருவில் இருந்து புறப்படும் சிறப்பு ரயில் (எண்: 06003) மறுநாள் மதியம் 2.30 மணிக்கு, பெங்களூருவை சென்றடையும். இந்த ரயில் 1ம் தேதி காலை 6 மணிக்கு, போத்தனுாரை வந்தடையும். வரும் 1ம் தேதி மாலை 3.50க்கு, பெங்களூருவில் இருந்து புறப்படும் சிறப்பு ரயில் (எண்: 06004) மறுநாள் காலை 7.30 மணிக்கு, மங்களூருவை சென்றடையும். இந்த ரயில், 1ம் தேதி இரவு 10.58 மணிக்கு, போத்தனுாரை வந்தடையும். இத்தகவலை, சேலம் கோட்ட ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ