உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / தமிழகத்தில் ஒரு கோடி கையெழுத்து காங். மாநில தலைவர் ஊட்டியில் பேட்டி

தமிழகத்தில் ஒரு கோடி கையெழுத்து காங். மாநில தலைவர் ஊட்டியில் பேட்டி

ஊட்டி:'ஓட்டு திருட்டை கண்டித்து, மாநிலம் முழுவதும் ஒரு கோடி கையெழுத்து பெற திட்டமிடப்பட்டுள்ளது,' என, தெரிவிக்கப்பட்டது. நீலகிரி மாவட்டம், ஊட்டியில் ஏ.டி.சி., பகுதியில் நடந்த கையெழுத்து இயக்கத்தை காங்., மாநில தலைவர் செல்வப்பெருந்தகை துவக்கி வைத்து நிருபர்களிடம் கூறியதாவது: ஓட்டு திருட்டை கண்டித்து, நாடு முழுவதும், 6 கோடி கையெழுத்து பெற காங்., திட்டமிடப்பட்டுள்ளது. அதில், தமிழகத்தில் மட்டும் ஒரு கோடி கையெழுத்து பெறப்பட்டு, ஜனாதிபதிக்கு அனுப்ப காங்., திட்டமிட்டுள்ளது. கரூர் சம்பவத்தில், தமிழக அரசு ஒரு ஆணையத்தை நியமித்துள்ளது. அந்த ஆணையம் நீதிபதி அருணா தலைமையில் முறையாக விசாரணை மேற்கொண்டு வருகிறது. பா.ஜ.,சார்பில் அமைக்கப்பட்டுள்ள குழு உண்மையை கண்டறியும் வகையில் இருக்க வேண்டும். அரசியல் செய்ய கூடாது. கரூர் பொது கூட்டத்தில் போலீசார் இல்லையென்றால், அன்றைய தினம் ஏராளமான பாதிப்புகள் ஏற்பட்டிருக்கும். அதற்கான 'வீடிேயா' ஆதாரங்கள் உள்ளன. மத்திய அரசு பல்வேறு மாநிலங்களுக்கும் ஜி.எஸ்.டி., தொகையை விடுவித்துள்ளது. ஆனால், அதிகம் கொடுக்கும் தமிழகத்திற்கு மிகவும் குறைந்த அளவிலான ஜி.எஸ்.டி., தொகையை விடுவித்துள்ளது. இது நியாயம் இல்லை. இவ்வாறு, அவர் கூறினார். ஊட்டி எம்.எல்.ஏ., கணேஷ் உட்பட பலர் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை