உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / வாகன விபத்தில் ஒருவர் காயம்

வாகன விபத்தில் ஒருவர் காயம்

கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு அருகே, நடந்த வாகன விபத்தில் ஒருவர் காயமடைந்தார்.கிணத்துக்கடவு, சிங்கையன்புதூர் அருகே உள்ள காதருத்தாமேடு பகுதியை சேர்ந்தவர் பொன்ராஜ், 43, கூலித்தொழிலாளி.இவர் தனது பைக்கில் சொக்கனுார் ரோட்டில் இருந்து கிணத்துக்கடவு நோக்கி வந்து கொண்டிருந்தார். அப்போது எதிரே சிங்கையன்புதூரைச் சேர்ந்த பிரபாகரன், என்பவர் ஓட்டி வந்த ஈச்சர் வண்டி, பொன்ராஜ் பைக் மீது மோதி விபத்து நடந்தது.இதில் படுகாயம் அடைந்த பொன்ராஜை, அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக கோவை தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். இது குறித்து கிணத்துக்கடவு போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி