மேலும் செய்திகள்
டிரைவர் கவனக்குறைவால் விபத்தில் விவசாயி பலி
11-Oct-2025
பொள்ளாச்சி; ஆனைமலை கிழவன்புதுாரைச் சேர்ந்தவர் சக்திவேல், 38, பால் வியாபாரி. இவர், தனது எக்ஸ்.எல்., பைக்கில், கெட்டிமல்லன்புதுார் - சிங்காநல்லுார் ரோட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது, எதிரே வந்த பயணியர் ஆட்டோ, அவரது மீது பயங்கரமாக மோதியது. அதில், சக்திவேலுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு, பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவரை பரிசோதித்த டாக்டர், ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தார். ஆனைமலை போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
11-Oct-2025