மேலும் செய்திகள்
ரயில் மோதி இறந்தவர் அடையாளம் தெரிந்தது
17-Dec-2024
பொள்ளாச்சி; பொள்ளாச்சி அருகே ரயிலில் அடிபட்டு இறந்தவர் குறித்து, பழநி ரயில்வே போலீசார் விசாரிக்கின்றனர்.பாலக்காட்டில் இருந்து சென்னைக்கு செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில், பொள்ளாச்சி வழியாக சென்று கொண்டு இருந்தது. கோமங்கலம் அருகே ரயில் சென்ற போது, 45 வயது மதிக்கதக்க நபர், ஒருவர் திடீரென்று தண்டவாளத்தை கடக்க முயன்றார்.அப்போது எதிர்பாராதவிதமாக ரயில் அந்த நபர் மீது மோதியது. சம்பவ இடத்திலேயே அவர் இறந்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த பழநி ரயில்வே போலீசார், இறந்த நபரின் சடலத்தை மீட்டு விசாரணை மேற்கொண்டனர்.அந்த நபர், கருப்பு முழுக்கை கோட், கருப்புகலர் கோடுபோட்ட பச்சை கலர் சட்டை, ஜீன்ஸ் பேன்ட் அணிந்து இருந்தார். யார் என்றும், எந்த ஊர் என்பதும் தெரியவில்லை. இது குறித்து பழநி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
17-Dec-2024