இருசக்கர வாகனம் மோதி ஒருவர் பலி
பெ.நா.பாளையம்,; பெரியநாயக்கன்பாளையம் அருகே இருசக்கர வாகனம் மோதி ஒருவர் உயிரிழந்தார்.கோவை மேட்டுப்பாளையம் ரோடு, பெரியநாயக்கன்பாளையம் அருகே இந்துமதி மருத்துவமனை முன்பு ஒருவர் ரோட்டை கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக வந்த இருசக்கர வாகனம் அவர் மீது மோதியது. இதில் காயம் அடைந்த அவர், கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உயிரிழந்தார். சுமார் 55 வயது மதிக்கத்தக்க அவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர் என்பது தெரியவில்லை. இச்சம்பவம் குறித்து, பெரியநாயக்கன்பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.