உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஆன்லைன் விளம்பர நிறுவனம்  இழப்பீடு வழங்க உத்தரவு 

ஆன்லைன் விளம்பர நிறுவனம்  இழப்பீடு வழங்க உத்தரவு 

கோவை; ஆன்லைன் விளம்பர நிறுவனம் இழப்பீடு வழங்க, கோவை நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டது. கோவை, டவுன்ஹால், கருப்பையா வீதியை சேர்ந்தவர் கார்த்திகேயன். நகை பட்டறை தொழில் சம்பந்தமாக விளம்பரப்படுத்த, கோவை அவிநாசி ரோட்டிலுள்ள, 'ஜஸ்ட் டயல்' என்ற ஆன்லைன் நிறுவனத்தை தொடர்பு கொண்டார். இதற்காக, மாதந்தோறும், 2,360 ரூபாய் வீதம் கட்டணம் கேட்டனர். ஒரு ஆண்டிற்கு விளம்பரபடுத்த ஒப்பந்தம் செய்து கொண்டனர். அதன்படி, மின்னணு பரிவர்த்தனை வாயிலாக அவரது வங்கி கணக்கிலிருந்து பணம் எடுக்கப்பட்டு வந்தது. ஒப்பந்த காலம் முடிந்தும், மாதாந்திர தொகையினை, வங்கி கணக்கிலிருந்து பிடித்தனர். ஆன்லைன் நிறுவனத்தை தொடர்பு கொண்டு, கட்டணம் பிடிப்பதை நிறுத்த முறையிட்டும் கேட்கவில்லை. இதனால் கூடுதலாக பிடித்த தொகை, 37,160 ரூபாயை திருப்பி தரவும், இழப்பீடு கோரியும், கோவை நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தாக்கல் செய்தார். விசாரித்த ஆணைய தலைவர் தங்கவேல் மற்றும் உறுப்பினர்கள் மாரிமுத்து, சுகுணா ஆகியோர் பிறப்பித்த உத்தரவில், 'மனுதாரர் வங்கி கணக்கிலிருந்து கூடுதலாக பிடித்தம் செய்த, 37,160 ரூபாயை திரும்ப கொடுப்பதோடு, மனஉளைச்சலுக்கு இழப்பீடாக, 10,000 ரூபாய் வழங்க வேண்டும்' என்று தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை