வாசகர்கள் கருத்துகள் ( 2 )
இந்தியன் என்ற உணர்வுடன் வாழ வேண்டும்
ஹிந்து என்பதே பிரிட்டிஷ்காரன் நமக்கு குடுத்த பேரு.
கோவை: ''ஹிந்து என்ற உணர்வோடு வாழ்ந்தால்தான் ஹிந்துவாகவேவாழ முடியும்,'' என, பேராசிரியர் ராம சீனிவாசன் பேசினார். ஜவஹர்லால் நேரு பல்கலை(மூலக்கூறு மருத்துவம்) பேராசிரியர் ஆனந்த் ரங்கநாதன் எழுதிய, 'ஹிந்துஸ் இன் ஹிந்து ராஷ்டிரா' என்ற ஆங்கில நுாலை, மொழிபெயர்ப்பாளர் பத்மன் 'ஹிந்து தேசத்தில் ஹிந்துக்கள்' என்ற தலைப்பில்,தமிழில் மொழி பெயர்த்துள்ளார். இந்நுால் வெளியீட்டு விழா, 'நம் தேசம் நம் பெருமை' அமைப்பு சார்பில் கோவை, அவிநாசி ரோடு, சர்தார் வல்லபாய் படேல் அரங்கில் நேற்று மாலை நடந்தது. ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் தலைவர் கிருஷ்ணன் நுாலை வெளியிட்டார். விழாவில், பேராசிரியர் ராம சீனிவாசன் பேசியதாவது: தேசம், தெய்வம், தர்மம் ஆகியன ஒன்றோடு ஒன்று இணைந்த சக்திதான் இந்தியா. ஒரு தேசத்தின் பெரும்பான்மை சமுதாயம், அவர்கள் படும் அவலம், அவமானத்தையும், வரும் காலத்தில் ஏற்படும் அபாயத்தையும் சொல்லும் புத்தகம் இது. சரியான நேரத்தில் இப்புத்தகம்வெளிவந்துள்ளது. இப்புத்தகத்தை படித்தால் எல்லோருக்கும் ஹிந்து என்ற உணர்வு வரும். காஷ்மீரில் ஹிந்துக்கள் நிலைமை, ஹிந்து பள்ளிகள் மூடல், கோவில்கள் நிலைமை என, எட்டு விஷயங்கள் முத்தாய்ப்பாய் இப்புத்தகத்தில் சொல்லப்படுகிறது. இந்தியா என்ற ஒரே நாட்டில்தான் பெரும்பான்மையை விட, சிறுபான்மை மக்களுக்கு சலுகைகள் அதிகம் தரப்படுகின்றன. அபாயத்தில் ஹிந்துக்கள் இருக்கின்றனர். ஹிந்து உணர்வோடு வாழ்ந்தால்தான், எதிர்கால தலைமுறை ஹிந்துவாகவேவாழ முடியும். இப்போதாவது ஹிந்துக்கள் விழித்தெழ வேண்டும் என்ற எச்சரிக்கையை, இப்புத்தகம் தருகிறது. ஹிந்துவாக வாழ்வதைவிட, ஹிந்துவாக வாக்களித்தால் மட்டுமே ஹிந்து தர்மத்தை காக்கமுடியும். ஜாதி, சின்னம் பார்த்து ஓட்டுப்போடுபவர்கள், 2026 தேர்தலில் ஹிந்துவாக ஓட்டு போடுங்கள். ஹிந்துக்கள் தற்போது அதிகாரத்தில் இருக்க வேண்டியது முக்கியம். இவ்வாறு, அவர் பேசினார். அறியாமையை போக்கும்! நுாலாசிரியர் ஆனந்த் ரங்கநாதன் தனது ஏற்புரையில், ''ஹிந்துக்களையும், ஹிந்துமதத்தையும் எதிர்ப்பவர்களின் கண்களை திறக்கவே, இந்த புத்தகத்தை எழுதியுள்ளேன். ஹிந்துக்களிடம் கடலளவு அறியாமை நிலவுகிறது. இந்த புத்தகம் அந்த அறியாமையை போக்கும்,'' என்றார். 'நம் தேசம் நம் பெருமை' அமைப்பின் தலைவர் பாலசுப்ரமணியம் உட்பட பலர் பங்கேற்றனர்.
இந்தியன் என்ற உணர்வுடன் வாழ வேண்டும்
ஹிந்து என்பதே பிரிட்டிஷ்காரன் நமக்கு குடுத்த பேரு.