ஓபன் கபடி போட்டி; இருபாலர் அணிகளும் ஆக்ரோஷம்
கோவை : 'முதல்வர் கோப்பை' ஆண்களுக்கான 'ஓபன்' கபடி போட்டியில், கோவை 7ஸ் அணியும், பெண்கள் பிரிவில் வளர்பிறை அணியும், முதலிடத்தை தட்டின.முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டிகளில், ஆண்களுக்கான 'ஓபன்' பிரிவு கபடி போட்டிகள் கற்பகம் பல்கலையில் நடந்தது. 20க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்றன.பல்வேறு சுற்றுகளையடுத்து, முதல் அரையிறுதியில் கோவை 7ஸ் அணி, 30-13 என்ற புள்ளி கணக்கில், ரத்தினபுரி சிவா மெமோரியல் அணியை வென்றது.இரண்டாம் அரையிறுதியில், கணுவாய் கே.சி.கே., சூர்யா ஸ்போர்ட்ஸ் அணியும், சூலுார் ஸ்போர்ட்ஸ் கிளப் அணியும் மோதின.இரு அணி வீரர்களும், ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்திய நிலையில், 30-27 என்ற புள்ளி கணக்கில், சூலுார் ஸ்போர்ட்ஸ் கிளப் அணியை, கே.சி.கே., சூர்யா ஸ்போர்ட்ஸ் அணி வென்றது.இறுதிப்போட்டியில் விளையாடிய கோவை 7ஸ் அணி, 30-23 என்ற புள்ளி கணக்கில் கே.சி.கே., சூர்யா ஸ்போர்ட்ஸ் அணியை வென்று முதலிடம் பிடித்தது.சிவா மெமோரியல் அணி, 20-8 என்ற புள்ளி கணக்கில், சூலுார் ஸ்போர்ட்ஸ் கிளப் அணியை வென்று, மூன்றாம் இடம் பிடித்தது. பெண்களுக்கான போட்டியில், வளர்பிறை அணி, 42-25 என்ற புள்ளி கணக்கில், கலைச்செல்வி மெமோரியல் அணியை வென்று முதலிடம் பிடித்தது. வெற்றி பெற்றவர்களுக்கு, பாராட்டுகள் தெரிவிக்கப்பட்டன.