உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / உக்கடம் புல்லுக்காடு பகுதியில் விளையாட்டு மைதானம் திறப்பு

உக்கடம் புல்லுக்காடு பகுதியில் விளையாட்டு மைதானம் திறப்பு

கோவை : உக்கடம் புல்லுக்காடு பகுதியில் புதிதாக அமைத்துள்ள விளையாட்டு மைதானத்தை, கலெக்டர் கிராந்திகுமார் திறந்து வைத்தார்.கோவை மாநகராட்சி, 86வது வார்டு, உக்கடம் புல்லுக்காடு பகுதியில் சூரிய ஒளி மின்னுற்பத்தி நிலையத்துக்கு அருகில், 1.09 ஏக்கர் பரப்பளவில், ஒரு ஏக்கர் பரப்பளவுக்கு மண் மேடுகள் சமன் செய்யப்பட்டு, புதர்கள் அகற்றப்பட்டன.அவ்விடத்தில் ரூ.6.90 லட்சம் மதிப்பீட்டில், 270 மீட்டர் நீளத்துக்கு முள்கம்பி வேலி, இரும்பு கதவு அமைத்து, விளையாட்டு மைதானம் அமைக்கப்பட்டுள்ளது. இம்மைதானத்தை கலெக்டர் கிராந்திகுமார், பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தார்.மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன், போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன், மேயர் ரங்கநாயகி, உதவி கமிஷனர் (பொ) இளங்கோவன், கவுன்சிலர் அகமது கபீர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை