மேலும் செய்திகள்
நலவாழ்வு மையம் திறப்பு விழா
04-Jul-2025
பெ.நா.பாளையம்; பெரியநாயக்கன்பாளையம் அருகே கூடலுார் நகராட்சிக்கு உட்பட்ட தெற்கு பாளையத்தில், 25 லட்ச ரூபாய் செலவில் கட்டப்பட்ட நகர்ப்புற சுகாதாரம் மற்றும் ஆரோக்கிய மைய கட்டடம் திறப்பு விழா நடந்தது.இம்மையத்தை தமிழக முதல்வர் ஸ்டாலின், காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். விழாவில், நகராட்சி தலைவர் அறிவரசு, வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் சிவலிங்கம் ஆகியோர் குத்து விளக்கு ஏற்றி, பயன்பாட்டுக்கு கொண்டு வந்தனர்.இந்த நகர்ப்புற சுகாதார மையத்தில், தலா ஒரு மருத்துவர், செவிலியர், சுகாதார ஆய்வாளர், மற்றும் உதவி பணியாளர் ஆகியோர் நியமிக்கப்படுகின்றனர். டாக்டர் ஈஸ்வர் பிரசாத் மற்றும் செவிலியர்கள், ஊழியர்கள் உள்ளிட்டோர், பொதுமக்களுக்கு அறிமுகம் செய்து வைக்கப்பட்டனர். நிகழ்ச்சியில், கூடலுார் நகராட்சி ஆணையாளர் மதுமதி, மேலாளர் நந்தகோபால், துணைத் தலைவர் ரதி ராஜேந்திரன், இன்ஜினியர் சோமசுந்தரம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
04-Jul-2025