உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / தீபாவளிக்கு வெளியூர் செல்வோர் வசதிக்காக பஸ்கள் இயக்கம்; மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு

தீபாவளிக்கு வெளியூர் செல்வோர் வசதிக்காக பஸ்கள் இயக்கம்; மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு

கோவை: பயணிகளின் வசதிக்காக வெளியூர் செல்லும் ஆம்னி பஸ்கள், கொடிசியா சிறப்பு பஸ் ஸ்டாண்ட்டில் இருந்து இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, நேற்று முதல் வரும், 31ம் தேதி வரை கோவையிலிருந்து, 2,495 சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதன்படி, மதுரை, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட தென்மாவட்டங்களுக்கு செல்லும், 1,030 பஸ்கள் சிங்காநல்லுார் பஸ் ஸ்டாண்ட்டில் இருந்து புறப்படும். திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை, காரைக்குடி, கரூர் மார்க்கமாக செல்லும், 300 பஸ்கள் சூலுார் பஸ் ஸ்டாண்ட்டில் இருந்து புறப்படும். மேட்டுப்பாளையம், சத்தியமங்கலம், ஈரோடு, சேலம், திருப்பூர், செல்லும், 540 பஸ்கள் காந்திபுரம் பஸ் ஸ்டாண்ட்டில் இருந்தும், பொள்ளாச்சி, உடுமலை, பழனி, பாலக்காடு செல்லும், 100 பஸ்கள், உக்கடத்தில் இருந்தும், திருப்பூர், ஈரோடு, மதுரை, திருச்சி, தேனி, திண்டுக்கல் செல்லும், 100 பஸ்கள், மேட்டுப்பாளையம் பஸ் ஸ்டாண்ட்டில் இருந்தும் புறப்படும்.சாய்பாபா காலனி, புதிய பஸ் ஸ்டாண்ட்டில் இருந்து, ஊட்டி, குன்னுார், கூடலுார் செல்லும், 175 பஸ்கள் புறப்படும். பொள்ளாச்சி பஸ் ஸ்டாண்ட்டில் இருந்து மதுரை, திருப்பூர், ஈரோடு, தேனி, திண்டுக்கல், ராஜபாளையம் செல்லும், 350 பஸ்கள் புறப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.இதுதவிர, வெளிமாவட்டங்களுக்கு செல்லும் தனியார் ஆம்னி பஸ்கள், கொடிசியாவில் இருந்து இயக்கப்படும். சென்னை, பெங்களூரு செல்லும் பஸ்கள் அவிநாசி ரோடு வழியாகவும், தென் மாவட்டங்களுக்கு செல்லும் ஆம்னி பஸ்கள், நீலாம்பூர், எல் அண்ட் டி பை-பாஸ் வழியாக திருச்சி ரோடு செல்லவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.ஆம்னி பஸ்களில் அதிக கட்டணம், பஸ் இயக்கத்தில் குறைபாடுகள், சந்தேகங்கள், கூடுதல் விபரங்களுக்கு, 1077 அல்லது, 0422 - 2306051 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம் என, மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை