உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஆப்பரேஷன் சிந்தூர் சர்வ மத பிரார்த்தனை

ஆப்பரேஷன் சிந்தூர் சர்வ மத பிரார்த்தனை

போத்தனூர்; கோவை மலுமிச்சம்பட்டியில், நாகசக்தி அம்மன் பீடம் உள்ளது. பாகிஸ்தானில் பயங்கரவாதிகளுக்கு எதிராக, நமது நாட்டு பாதுகாப்பு துறையினர் நடத்திய, ஆப்பரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு நன்றி தெரிவிக்கும், சர்வமத கூட்டு பிரார்த்தனை, பீடத்தின் நிறுவனர் சிவசண்முகசுந்தர பாபு சுவாமி தலைமையில் நடந்தது.பா.ஜ., சிறுபான்மை பிரிவின் தேசிய செயலாளர் வேலூர் இப்ராஹிம், தூய ஒளி கிறிஸ்தவ மக்கள் கூட்டமைப்பின் தலைவர் அருட்தந்தை இமானுவேல் ஜேக்கப் உள்பட பலர், கைகளில் தேசிய கொடியேந்தி ராணுவத்தினர் மற்றும் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாதுகாப்பு அமைச்சர் உள்ளிட்டோருக்கு நன்றி தெரிவித்து கோஷமிட்டனர். பின், அனைவரும் பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !