வாசகர்கள் கருத்துகள் ( 1 )
10வழி சைலை அமைத்தாலும் போக்குவரத்து நெருக்கடி ஏற்படும். குறுகிய மணப்பாண்மை மக்கள் / குறுகிய சாலை
கோவை: கோவை நகரின் முக்கிய பகுதியான ஒப்பணக்கார வீதி, தேசிய நெடுஞ்சாலைத்துறை பராமரிப்பில் இருக்கிறது. அதற்கேற்ப சாலை வசதியில்லை. கடைகளுக்கு முன் ரோட்டை ஆக்கிரமித்து இரு சக்கர வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன. நடைபாதையை ஆக்கிரமித்து பொருட்கள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. நடைபாதை ஆக்கிரமிப்பில் சிக்கியிருப்பதால், ரோட்டின் அகலம் சுருங்கியிருக்கிறது. எறும்பு போல் வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன. பாதசாரிகள் ரோட்டில் நடந்து செல்கின்றனர். அச்சமயத்தில் வாகனங்கள் அதிவேகத்தில் கடந்து செல்லும்போது, விபத்தில் சிக்குகின்றனர். ஒப்பணக்கார வீதியில் உள்ள மாநகராட்சி பள்ளிக்கு மாணவியர் வரும்போதும், வகுப்பு முடிந்து கிளம்பும்போதும், பீக் ஹவர்ஸ் சமயத்திலும் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. எதிர் திசையிலும் வாகனங்கள் வருவதால் போக்குவரத்து ஸ்தம்பிக்கிறது. விபத்து அபாயமும் இருக்கிறது. கடை ஊழியர்கள் வரும் வாகனங்களை ரோட்டில் நிறுத்துவதற்கு தடை விதித்து, மாற்று இடத்தில் நிறுத்துவதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும். பிரதான சாலையில் வாகனங்கள் நிறுத்துவதை தடுத்தாலே, போக்குவரத்து நெருக்கடிக்கு தீர்வு காணலாம். தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் கள ஆய்வு செய்து, ரோட்டின் உண்மையான அகலத்தை அளவீடு செய்து, ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும். அப்போதுதான் வாகனங்களும், பாதசாரிகளும் சிரமமின்றி கடந்து செல்ல முடியும்.
10வழி சைலை அமைத்தாலும் போக்குவரத்து நெருக்கடி ஏற்படும். குறுகிய மணப்பாண்மை மக்கள் / குறுகிய சாலை