மேலும் செய்திகள்
சோமையம்பாளையம் மக்கள் போராட திட்டம்
19-Jan-2025
பெ.நா.பாளையம்; துடியலூர் அருகே உள்ள குருடம்பாளையம் ஊராட்சியை, கோவை மாநகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு தெரிவித்து, 4 ஆயிரம் பேர் கையெழுத்திட்ட மனுவை, மாவட்ட நிர்வாகத்திடம் பொதுமக்கள் வழங்கினர்.பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியத்துக்கு உட்பட்ட குருடம்பாளையம் மற்றும் அசோகபுரம் ஊராட்சிகளை கோவை மாநகராட்சி உடன் இணைக்க, தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு அந்த ஊராட்சிகளை சேர்ந்த பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.குருடம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட விவசாய சங்கங்கள், குடியிருப்பு நல சங்கங்கள், ஊராட்சி பொதுமக்கள், சமூக நல ஆர்வலர்கள் கொண்ட மக்கள் இயக்கம் ஆகியன இணைந்து குருடம்பாளையம் ஊராட்சி ஒருங்கிணைப்பு குழு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பின் தலைவராக கோவிந்தராஜ் இருந்து வருகிறார். நேற்று இந்த அமைப்பைச் சார்ந்தவர்கள், மாவட்ட நிர்வாகத்திடம் மனு அளித்தனர். அதில், கோவை வடக்கு தாலுகா குருடம்பாளையம் ஊராட்சியில் சுமார், 300 குடும்பங்கள், 100 நாள் வேலை திட்டத்தை நம்பி உள்ளது. 80 சதவீத பொதுமக்கள், நடுத்தர மற்றும் கீழ் நடுத்தர வகுப்பை சேர்ந்தவர்கள். இது தவிர, 220 சிறு,குறு விவசாய குடும்பங்கள் உள்ளன. குருடம்பாளையம் ஊராட்சியை கோவை மாநகராட்சியுடன் இணைப்பதால், இவர்கள் கடுமையாக பாதிக்கப்படுவர்.மேலும், நமக்கு நாமே திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் நிறுத்தப்பட்டு விடும். குருடம்பாளையம் ஊராட்சியில் பல குக் கிராமங்கள் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டி அமைந்து உள்ளன. இந்த ஊராட்சியில் பல கிராமங்களுக்கு இன்னும் பஸ் வசதி கூட இல்லை. எனவே, பொதுமக்கள் கோரிக்கையை ஏற்று குருடம்பாளையம் ஊராட்சியை கோவை மாநகராட்சி உடன் இணைக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும் என, குறிப்பிட்டுள்ளனர். ஊராட்சியை சேர்ந்த, 4,140 பேர் மனுவில் கையெழுத்திட்டு உள்ளனர். மனு நகலை தமிழக ஊரக வளர்ச்சி துறை அமைச்சர், நகராட்சி நிர்வாக துறை அமைச்சர், நகராட்சி நிர்வாக முதன்மை செயலாளர், பெரியநாயக்கன்பாளையம் வட்டார வளர்ச்சி அலுவலர் உள்ளிட்டோருக்கும் அனுப்பப்பட்டுள்ளன.
19-Jan-2025