உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  கல்வி வளர்ச்சி நாள் கொண்டாட உத்தரவு

 கல்வி வளர்ச்சி நாள் கொண்டாட உத்தரவு

கோவை: முன்னாள் முதல்வர் காமராஜரின் பிறந்த நாளான ஜூலை 15ம் தேதியை, 'கல்வி வளர்ச்சி நாள்' ஆகக் கொண்டாட பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இதையொட்டி, மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் கல்வி வளர்ச்சி நாள் விழாவைச் சிறப்பாக நடத்த வேண்டும், மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டி, கவிதைப்போட்டி உள்ளிட்ட பல்வேறு போட்டிகளை நடத்தி பரிசுகள் வழங்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. காமராஜரின் கல்விப் பணிகள் மற்றும் கல்வி வளர்ச்சிக்கான பங்களிப்புகளை மாணவர்கள் அறிந்து கொள்ளும் வகையில் சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ