உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மிலாடி நபியன்று மதுக்கடை மூட உத்தரவு 

மிலாடி நபியன்று மதுக்கடை மூட உத்தரவு 

கோவை; கலெக்டர் அறிக்கை: கோவை மாவட்டத்தில் உள்ள மதுக்கடைகள், மதுக்கூடங்கள்,பொழுதுபோக்கு நட்சத்திர ஓட்டல்களில் செயல்படும் மதுக்கூடங்கள், தமிழ்நாடு ஓட்டல், சுற்றுலாத்துறையால் நடத்தப்படும் மதுக்கூடங்கள், இறக்குமதி செய்த அயல்நாட்டு மது விற்பனை மையம், அனைத்து மதுக்கடை மற்றும் மதுக்கூடங்களும் வரும் 5ல், மிலாடி நபியை முன்னிட்டு, மூட உத்தரவிடப்பட்டுள்ளது. விதிமுறைக்கு முரணாக அன்று மது விற்பவர்கள் மீதும், மதுவகைகளை சட்ட விரோதமாக பதுக்கி வைத்திருப்பவர்கள், மது வகைகளை ஓரிடத்தில் இருந்து, மற்றொரு இடத்துக்கு எடுத்துச் செல்பவர்கள் மீதும், நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை