உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பதிவாகும் பத்திரங்களை அன்றே வழங்க உத்தரவு

பதிவாகும் பத்திரங்களை அன்றே வழங்க உத்தரவு

கோவை; கோவை கலெக்டர் அலுவலகத்தில், வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி தலைமையிலான சீராய்வுக்கூட்டம் நடந்தது. கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, கோபிசெட்டிபாளையம் சார்பதிவாளர்கள் மற்றும் மாவட்ட பதிவாளர்களிடம் பேசிய அமைச்சர், அன்றாடம் பதிவு செய்யும் பத்திரங்களை அன்றே வழங்கவும், பொதுமக்களிடம் கனிவாக நடந்துகொள்ளவும் அறிவுறுத்தினார். இக்கூட்டத்தில்வணிகவரி மற்றும் பதிவுத் துறை செயலாளர் ஷில்பா பிரபாகர் சதீஷ், பதிவுத் துறை தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், கோவை கலெக்டர் பவன்குமார், கோவை மண்டல துணைப்பதிவுத் துறைத் தலைவர் பிரபாகர், உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ