மேலும் செய்திகள்
கூட்டுறவு சங்க பணியாளர்கள் குறைதீர் கூட்டம்
15-Sep-2024
கோவை : ரேஷன் கடைகளில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.இது குறித்து, கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சுப்பையன் கூறியிருப்பதாவது:ரேஷன் கடைகளில் உள்ள விற்பனையாளர், கட்டுனர் காலிப் பணியிடங்களை கணக்கிட்டு அறிவிக்க வேண்டும். இந்தப் பணியை கூட்டுறவு சங்கங்களின் அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டும். வேலை வாய்ப்பு அலுவலகத்தில் இருந்து தகுந்த வயது போன்ற தகுதிகளுடன் விற்பனையாளர்கள் மற்றும் கட்டுனர்களின் பட்டியலைப் பெற வேண்டும்.தகுதியுள்ள நபர்களைத் தேர்வு செய்து, அவர்களுக்கான நேர்முகத் தேர்வை நவம்பர் இறுதிக்குள் நடத்தி, டிசம்பர் மூன்றாவது வாரத்தில், தேர்வானவர்களின் இறுதிப் பட்டியலை வெளியிட வேண்டும்.இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.
15-Sep-2024