/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சிங்காநல்லுார் குளத்துக்கான நீர் வழித்தடங்களை துார்வார உத்தரவு
சிங்காநல்லுார் குளத்துக்கான நீர் வழித்தடங்களை துார்வார உத்தரவு
கோவை : சிங்காநல்லுார் குளத்துக்கு செல்லும் நீர் வழித்தடங்களை விரைவாக துார்வாருமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.மாநகராட்சி பகுதிகளில் உள்ள நீர் வழித்தடங்களை துார்வாரும் பணி நடந்துவருகிறது. அதன்படி, மழைக்காலங்களில் தண்ணீர் தங்குதடையின்றி செல்லும் விதமாக சிங்காநல்லுார் குளத்துக்கு செல்லும் நீர் வழித்தடங்கள் துார்வாரப்படுகின்றன. நஞ்சுண்டாபுரம் அணைக்கட்டில் இருந்து சிங்காநல்லுார் குளம் வரையிலான, 4 கி.மீ., துாரத்துக்கு ராஜ வாய்க்காலை துார்வாரும் பணிகள் மேற்கொள்வது தொடர்பாக, மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் நேற்று ஆய்வு செய்தார். அப்போது, பணிகளை விரைந்து முடிக்க அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். உதவி கமிஷனர் முத்துசாமி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.