உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / டாக்டருக்கு ரூ.32 லட்சம் மருத்துவ காப்பீடு வழங்க உத்தரவு

டாக்டருக்கு ரூ.32 லட்சம் மருத்துவ காப்பீடு வழங்க உத்தரவு

கோவை: ஜப்பானில் அறுவை சிகிச்சை செய்த டாக்டருக்கு ரூ. 32 லட்சம் மருத்துவ காப்பீடு வழங்க நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டது. கரூர், பண்டாரி நாதன் சன்னதி வீதியை சேர்ந்த டாக்டர் மோகன், 73, கோவையில் உள்ள ஒரு சுற்றுலா நிறுவனம் வாயிலாக ஜப்பானுக்கு கடந்த 2023, ஏப்.,1ல் விமானத்தில் சென்றார். ஜப்பானில் வைத்து டாக்டர் மோகனுக்கு மாரடைப்பு ஏற்பட்டது. அங்குள்ள மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. சிசிச்சைக்கு, ரூ. 32 லட்சம் செலவானது.ஜப்பானுக்கு புறப்படும் முன்பு சுற்றுலாவுக்கான மருத்துவ காப்பீட்டை மும்பையை தலைமையிடமாக கொண்ட, கோவை காட்டூரில் செயல்பட்ட ஐ.சி.ஐ.சி.ஐ., லம்பார்ட் ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் காப்பீடு செய்து இருந்தார். எனவே மருத்துவ செலவு தொகை ரூ.32 லட்சத்தை வழங்குமாறு அந்த இன்சூரன்ஸ் நிறுவனத்துக்கு விண்ணப்பித்தார். நீரிழிவு நோய் மற்றும் ரத்த அழுத்தம் முனகூட்டியே இருந்ததால்தான் மாரடைப்பு ஏற்பட்டதாக கூறி, மருத்துவ செலவு தொகையை இன்சூரன்ஸ் நிறுவனம் வழங்க மறுத்தது. இதனால் கோவை நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் இழப்பீடு கேட்டு மனுதாக்கல் செய்யப்பட்டது.மனுவை விசாரித்த ஆணைய தலைவர் தங்கவேல் பிறப்பித்த உத்தரவில், டாக்டர் மோகனுக்கு இன்சூரன்ஸ் நிறுவனம் ரூ. 32 லட்சம், மன உளைச்சலுக்கு ரூ. 10 ஆயிரம், செலவு தொகை ரூ. 5000 வழங்க வேண்டும் என்று உத்தரவில் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி