உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / வாகன கழிவுகளை அகற்ற உத்தரவு

வாகன கழிவுகளை அகற்ற உத்தரவு

மேட்டுப்பாளையம்; மேட்டுப்பாளையம் சாலைகளில் ஆக்கிரமித்து வைக்கப்பட்டுள்ள வாகன கழிவுகளை, அகற்ற வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.மேட்டுப்பாளையம் வட்டாட்சியர் அலுவலகத்தில் நேற்று வடக்கு வருவாய் கோட்டாட்சியர் தலைமையில், போலீஸ், நெடுஞ்சாலைத்துறை, மேட்டுப்பாளையம் நகராட்சி நிர்வாகம் மற்றும் போக்குவரத்து துறை அலுவலர்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.இக்கூட்டத்தில், சிறுமுகை சாலை, சங்கர் நகர், எல்.ஐ.சி.,அலுவலகம் பின்புறம் அமைந்துள்ள சாலை பகுதிகளில் ஆக்கிரமித்துள்ள வாகன கழிவுகளை அதற்கு சொந்தமானவர்கள் தாங்களாகவே முன்வந்து ஜுன் 3ம் தேதிக்குள் அகற்றிட வேண்டும். தவறும் பட்சத்தில் வருவாய் துறை, போக்குவரத்துத்துறை, நகராட்சி நிர்வாகம், நெடுஞ்சாலைத்துறை, போலீஸ் ஆகிய அனைத்து அரசு துறைகள் வாயிலாக ஒருங்கிணைந்து சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்' என முடிவு செய்யப்பட்டது.-----


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ