சேதமடைந்த ரோடு சீரமைக்க உத்தரவு
கோவை,; மாநகராட்சி பகுதிகளில், 24 மணிநேர குடிநீர் திட்டத்துக்காகவும், பாதாள சாக்கடைக்காகவும்(யு.ஜி.டி.,) ரோடுகள் தோண்டப்பட்டு பணிகள் நடந்துவருகின்றன. இதனால், ரோடுகள் சேதமடைந்துள்ள நிலையில் தற்போது பெய்துவரும் மழையால் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் பெரும் சிரமங்களை சந்தித்துவருகின்றனர்.இந்நிலையில், வடக்கு மண்டலம், 1வது வார்டுக்கு உட்பட்ட அப்பநாயக்கன்பாளையம் முதல் கணுவாய் ரோடு வரையும், 13வது வார்டுக்கு உட்பட்ட ஜி.என்., மில்ஸ் ரோடு, கொங்குநாடு கலை அறிவியல் அருகே வரையும் குடிநீர் திட்டம், யு.ஜி.டி., பணிகளுக்காக தோண்டப்பட்டு சேதமடைந்த ரோடுகளை, மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன், மாவட்ட கலெக்டர் ஆகியோர் கூட்டாக ஆய்வு செய்தனர்.பொது மக்கள் சிரமங்களை போக்கும் விதமாக சேதமடைந்த ரோடுகளை உடனடியாக சீரமைக்குமாறு, அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டது. மாநகராட்சி தலைமை பொறியாளர் விஜயகுமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.