நடுவர் பணிக்காக விடுவிக்க உத்தரவு
கோவை: கோவை வருவாய் மாவட்ட அளவில் கால்பந்து, வாலிபால், ஹாக்கி ஆகிய பழைய விளையாட்டு போட்டிகள் இன்றும், நாளையும் ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லுாரி மைதானங்களில் நடக்கின்றன. கால்பந்துக்கு 14, வாலிபால் 27, ஹாக்கிக்கு 10 என, 51 உடற்கல்வி ஆசிரியர்கள் போட்டி நடுவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களை இவ்விரு தேதிகளிலும் அவர்களை ரெகுலர் பணியில் இருந்து விடுவிக்குமாறு, சம்பந்தப்பட்ட பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு, மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் குமரேசன் உத்தரவிட்டுள்ளார்.