உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / நவீன கழிவுநீர் உந்து நிலையத்தின் பணிகளை விரைந்து முடிக்க உத்தரவு

நவீன கழிவுநீர் உந்து நிலையத்தின் பணிகளை விரைந்து முடிக்க உத்தரவு

கோவை; கவுண்டம்பாளையம், துடியலுார் பகுதிகளில் ரூ.554.67 கோடி மதிப்பீட்டில் பாதாள சாக்கடை திட்ட பணிகள் நடந்துவருகின்றன. இத்திட்டத்தின் ஒரு பகுதியாக, கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம், கவுண்டம்பாளையத்தில் அமைக்கப்படுகிறது.துடியலுார் பகுதிகளில் இருந்து, பாதாள சாக்கடை குழாய் வாயிலாக, சுப்பிரமணியம்பாளையத்தில் அமைந்துள்ள கழிவுநீர் உந்து நிலையம் சென்று, அங்கிருந்து கவுண்டம்பாளையத்திற்கு கழிவுநீர் எடுத்து செல்லப்பட உள்ளது.இதற்கென, தொட்டிகள் அமைப்பதற்கு அருகே குடியிருப்புகள் உள்ளதால், மக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில், நவீன முறையில், 10 மீ., விட்டமும், 8 மீ., ஆழமும் கொண்ட தொட்டி கட்டப்பட்டு வருகிறது. இப்பணிகளை மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் ஆய்வு செய்தார்.தொடர்ந்து, சின்னவேடம்பட்டி, சரவணம்பட்டி, வெள்ளக்கிணறு பிரிவு ஆகிய பகுதிகளுக்குட்பட்ட பாதாள சாக்கடைக்கான, முதன்மை கழிவுநீர் உந்துநிலையம் கட்டுமான பணிகளையும் பார்வையிட்ட அவர், பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ