உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / நாளை நடக்கும் கிராம சபை கூட்டத்தில் செயல் திட்டம் தயாரிக்க உத்தரவு

நாளை நடக்கும் கிராம சபை கூட்டத்தில் செயல் திட்டம் தயாரிக்க உத்தரவு

மேட்டுப்பாளையம்; நாளை, நடைபெற உள்ள கிராம சபை கூட்டத்தில், முழுமையான செயல் திட்டம் தயாரிக்க வேண்டும் என, தமிழக அரசு, ஊராட்சி நிர்வாகத்திற்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழக உள்ளாட்சியில், மக்கள் பிரதிநிதிகளின் நிர்வாகம்,கடந்த ஐந்தாம் தேதியுடன் நிறைவடைந்தது. அதனால் தற்போது தனி அலுவலர் (ஸ்பெஷல் ஆபீஸர்) நிர்வாகத்தின் கீழ், உள்ளாட்சி நிர்வாகம் நடைபெறுகிறது.தனி அலுவலர் நிர்வாகத்தின், இந்த ஆண்டின் முதல் கிராம சபை கூட்டம், நாளை, 26ம் தேதி குடியரசு தினத்தன்று நடைபெற உள்ளது. இது குறித்து தமிழக அரசு, உள்ளாட்சி நிர்வாகத்திற்கு ஆணை அனுப்பி உள்ளது. அதில், குடியரசு தினத்தன்று நடைபெறும் கிராம சபை கூட்டத்தில், கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம் குறித்து, விவாதிக்க வேண்டும். கிராமத்தின் இலக்குகளை முழுமையாக அடைவதை குறிக்கோளாகக் கொண்டு, பிற துறைகளில் திட்டங்களை உள்ளடக்கி, கிராம ஊராட்சி வளர்ச்சி திட்டம் தயாரிக்க வேண்டும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி