உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / இயற்கை விவசாயிகள் நுகர்வோர் சந்திப்பு

இயற்கை விவசாயிகள் நுகர்வோர் சந்திப்பு

- நமது நிருபர் -பொங்கலுார், குண்டடம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த இயற்கை விவசாயிகள் சிலர் ஒருங்கிணைந்து, இயற்கை முறையில் காய்கறி உற்பத்தி செய்து வருகின்றனர். தாங்கள் உற்பத்தி செய்த காய்கறிகளை, சிவன் இயற்கை சந்தை என்ற பெயரில் பல்லடம், திருப்பூர் பகுதியில் சந்தை அமைத்து விற்பனை செய்கின்றனர். ராமேகவுண்டம்பாளையம் இயற்கை விவசாயி சுரேஷ் தோட்டத்தில் இயற்கை விவசாயிகள், நுகர்வோர் சந்திப்பு கூட்டம் நடந்தது. விவசாயிகள் பேசியதாவது: இயற்கை விவசாயத்தில் சேதம் அதிகம். சில நேரங்களில், 90 சதவீதம் கூட இழப்பு ஏற்படுகிறது. இழப்பை தியாகம் செய்து தான் இயற்கை விவசாயம் செய்கிறோம். ரசாயனங்களை பயன்படுத்தியதால் நன்மை செய்யும் பூச்சிகள் குறைந்து போனது. தொடர்ந்து இயற்கை விவசாயம் செய்யும் பொழுது நன்மை செய்யும் பூச்சிகள் பெருகும். அதற்கு சில காலம் பிடிக்கும். நினைத்த காய் கிடைக்கவில்லையே என்று நுகர்வோர் வருத்தப்படக்கூடாது. சீசனில் கிடைக்கும் காய்களை வாங்கி பயன்படுத்த பழக வேண்டும். பாலித்தீன் பிடியிலிருந்து வெளியில் வர வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை