உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சிறுவனுக்கு பெல்ட்டால் அடி ஆதரவற்றோர் இல்லம் மூடல்

சிறுவனுக்கு பெல்ட்டால் அடி ஆதரவற்றோர் இல்லம் மூடல்

அன்னுார்:அன்னுார் அருகே காப்பக நிர்வாகி, சிறுவனை பெல்ட்டால் தாக்கிய சம்பவத்தை அடுத்து ஆதரவற்றோர் இல்லம் மூடப்பட்டது. கோவை மாவட்டம், கோவில்பாளையத்தை சேர்ந்தவர் செல்வராஜ், 58. மனைவி நிர்மலா. இவர்கள் இருவரும் கோட்டைபாளையத்தில், 'கிரேசி ஹேப்பி ஹோம்ஸ்' என்ற பெயரில் ஆதரவற்றோர் இல்லத்தை, 12 ஆண்டுகளாக நடத்தி வருகின்றனர். இதில், ஒன்பது சிறுவர்கள் தங்கி படித்து வந்தனர். ஒரு சிறுவனை செல்வராஜ் பெல்ட்டால் சரமாரியாக தாக்கினார். செல்வராஜ் மீது வழக்கு பதிந்து, கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார். குழந்தைகள் நல பாதுகாப்பு அதிகாரிகள், ஆதர வற்றோர் இல்லத்தை ஆய்வு செய்தனர். போதுமான வசதிகள் இல்லாததை கண்டறிந்து, அரசு அளித்த அங்கீகாரத்தை ரத்து செய்து இல்லத்தை மூட பரிந்துரைத்தனர். அங்கு வசித்த, ஒன்பது சிறுவர்களில் நான்கு பேரை அன்னுாருக்கும், மூன்று பேரை மேட்டுப்பாளையத்துக்கும், இருவரை உறவினர்களிடமும் ஒப்படைத்தனர். 'அனுமதியின்றி நடத்தப்படும் காப்பகங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என, நேற்று அமைச்சர் கீதா ஜீவன் எச்சரிக்கை விடுத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை