நெல்லித்துறை பாலத்தில் புறக்காவல் நிலையம்
மேட்டுப்பாளையம்; மேட்டுப்பாளையம் அருகே நெல்லித்துறை பவானி ஆற்று பாலத்தின் அருகே புறக்காவல் நிலையம் திறக்கப்பட்டுள்ளது. மேட்டுப்பாளையம் அருகே வனபத்ரகாளியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு தினமும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். இக்கோவிலின் அருகே நெல்லித்துறை பவானி ஆற்றுப் பாலம் உள்ளது. இப்பாலத்தை கடந்து பில்லூர் அணை வழியாக கேரளவுக்கு செல்ல முடியும். எனவே இப்பகுதிகளில் மக்கள் நடமாட்டம் மிகுந்து காணப்படுகிறது. இதையடுத்து, பக்தர்கள் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பிற்காக இப்பகுதியில் மேட்டுப்பாளையம் போலீஸ் ஸ்டேஷனுக்குட்பட்ட புறக்காவல் நிலையம் ஒன்று திறக்கப்பட்டுள்ளது. இதனால் இங்கு 24 மணி நேரமும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.-----