உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மேல்நிலை தொட்டி துாண்கள் சேதம்; சீரமைக்க கிராம மக்கள் வலியுறுத்தல்

மேல்நிலை தொட்டி துாண்கள் சேதம்; சீரமைக்க கிராம மக்கள் வலியுறுத்தல்

கிணத்துக்கடவு,; கிணத்துக்கடவு, வடபுதூரில் உள்ள மேல் நிலை தண்ணீர் தொட்டி தூண்கள் சேதம் அடைந்துள்ளன. கிணத்துக்கடவு, வடபுதூர் ஊராட்சி, 4வது வார்டு, அண்ணா நகரில் 30க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன். இதன் அருகில், மேல்நிலை தண்ணீர் தொட்டி மற்றும் விநாயகர் கோவில் அமைந்துள்ளது. இந்த தண்ணீர் தொட்டியின் அடிப்பகுதி தூண்களில், கான்கிரீட் பூச்சுகள் சேதமடைந்து இரும்பு கம்பிகள் வெளியே தெரியும்படி உள்ளது. மேலும், தூண்களின் மேல் பகுதியில் ஆங்காங்கே விரிசல் காணப்படுகிறது. இதனால் அப்பகுதியினர் சிலர் தொட்டி சேதம் அடைந்தால், குடியிருப்புகளுக்கு பாதிப்பு ஏற்படுமோ என அச்சத்தில் உள்ளனர். இந்த மேல் நிலை தொட்டி அருகே, கழிவு நீர் ரோட்டில் வழிந்து ஓடுவதால், அப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுகிறது. பொது சுகாதாரம் பாதிக்கப்படுகிறது. இந்த பிரச்னையால், இப்பகுதியில் உள்ள இரு பள்ளி மாணவர்களுக்கு, டெங்கு தாக்குதல் ஏற்பட்டிருந்தது. வயதானவர்கள் அடிக்கடி மருத்துவமனை செல்லும் நிலை உள்ளது. மேலும், இந்த கழிவு நீர் கோவில் முன் செல்வதால், சுவாமி கும்பிட யாரும் வருவதில்லை. குறிப்பாக விசேஷ நாட்களில் ஆட்கள் வருவது குறைந்துள்ளது. எனவே, ஊராட்சி நிர்வாகத்தினர் மேல்நிலை தொட்டியின் தூண்களை சீரமைப்பு செய்து, கழிவு நீர் செல்ல கால்வாய் அமைக்க வேண்டுமென, மக்கள் வலியுறுத்துகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை