மேலும் செய்திகள்
பழநி பாதயாத்திரைக்குழு ஆலோசனை கூட்டம்
27-Jan-2025
வால்பாறை : வால்பாறை சுப்ரமணிய சுவாமி கோவில் முருகபக்தர்கள் காவடிக்குழுவின் பழநி பாதயாத்திரை, 49ம் ஆண்டு திருவிழா வரும், 14ம் தேதி நடக்கிறது.அன்று காலை, 6:00 மணிக்கு கணபதி ேஹாமம், 9:30 மணிக்கு நடுமலை ஆற்றிலிருந்து பால்குடம் எடுத்தல், சிறப்பு அபிேஷக பூஜைகள் நடக்கிறது. மதியம், 12:00 மணிக்கு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.வரும், 15ம் தேதி காலை, 10:00 மணிக்கு சுப்ரமணிய சுவாமிக்கு சிறப்பு அலங்கார பூஜை நடக்கிறது. 16ம் தேதி மாலை, 3:30 மணிக்கு பழநி ஆண்டவர் கோவிலுக்கு பக்தர்கள் பாதயாத்திரையை துவங்குகின்றனர்.விழா ஏற்பாடுகளை, பழநி பாதயாத்திரைக்குழு தலைவர் மருதையப்பன், பொருளாளர் அழகுராஜ், செயலாளர்கள் கண்ணன், செந்தில்முருகன், அசோக், செல்வன் ஆகியோர் செய்து வருகின்றனர்.
27-Jan-2025