உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஊராட்சி செயலாளர்கள் விரைவில் மாற்றம்

ஊராட்சி செயலாளர்கள் விரைவில் மாற்றம்

பெ.நா.பாளையம்: ஊராட்சி மன்ற நிர்வாகத்தின் பதவிக்காலம் முடிவடைந்ததை ஒட்டி, இதுவரை அங்கு பணியாற்றி வந்த ஊராட்சி செயலாளர்கள், வேறு ஊராட்சிகளுக்கு விரைவில் மாறுதல் செய்யப்பட உள்ளனர்.கடந்த ஜன. 5ம் தேதி ஊராட்சி மன்ற நிர்வாகத்தின் பதவிக்காலம் முடிவுக்கு வந்தது. இதையடுத்து, தனி அலுவலர்களிடம் ஊராட்சி நிர்வாகத்தின் நிர்வாக பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. ஒரே ஊராட்சியில் நீண்ட காலம் பணியாற்றி வந்த ஊராட்சி செயலாளர்கள், விரைவில் மாறுதல் செய்யப்பட உள்ளனர். ஊராட்சி செயலாளர் முதுநிலை மற்றும் நிர்வாக அனுபவத்திற்கு ஏற்ப வேறு கிராம ஊராட்சிகளில் பணியமர்த்தப்பட உள்ளனர். நிர்வாக நலன் மற்றும் கலந்தாய்வு அடிப்படையில் ஊராட்சி செயலாளர்களுக்கு பணி மாறுதல் வழங்கப்பட உள்ளது.இது குறித்து, ஊராட்சி செயலாளர்கள் தரப்பில் கூறுகையில்,' ஒரே ஊராட்சியில், 5 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றிய ஊராட்சி செயலாளர்கள், வேறு ஊராட்சிக்கு மாறுதல் பெற கலந்தாய்வு விரைவில் ஏற்பாடு செய்யப்படுகிறது.அதன் அடிப்படையில் செயலாளர்கள் மாற்றப்பட உள்ளனர்' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ