உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சிறுமுகை முருகர் கோவில்களில் பங்குனி மாத கிருத்திகை விழா

சிறுமுகை முருகர் கோவில்களில் பங்குனி மாத கிருத்திகை விழா

மேட்டுப்பாளையம்; சிறுமுகை பழத்தோட்டத்தில், மிகவும் பழமையான பாலசுப்பிரமணியர் கோவில் உள்ளது. இங்கு கிருத்திகை விழா விமரிசையாக நடைபெறும்.நேற்று பங்குனி மாத கிருத்திகை முன்னிட்டு, காலை, 6:00 மணிக்கு கோவில் நடை திறந்து, திருப்பள்ளி எழுச்சி நடந்தது. பின்பு மூலவருக்கு பால் அபிஷேகம், கால சந்தி பூஜை ஆகியவை நடைபெற்றன.10:00 மணிக்கு கல்லாறு அகத்தியர் ஞானபீட சரோஜினி மாதாஜி, ஆன்மீக சொற்பொழிவு ஆற்றினார். பாலசுப்பிரமணியர் சுவாமிக்கு, 16 வகையான வாசனை திரவியங்களால், மகா அபிஷேகம் நடந்தது. அதைத் தொடர்ந்து அலங்காரம் பூஜையும், தீபாராதனையும் நடந்தது. பின்பு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. சிறுமுகை அடுத்த எலகம்பாளையத்தில் மிகவும் பழமையான பாலதண்டாயுதபாணி சுவாமி கோவில் உள்ளது. இங்கு பங்குனி மாத கிருத்திகை முன்னிட்டு, காலை, 6:00 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. காலை, 10:00 மணிக்கு அபிஷேக பூஜை நடந்தது. பாலதண்டாயுதபாணி பஜனை குழுவினர் பஜனை பாடினர். மதியம், 12:00 மணிக்கு அலங்கார பூஜையும், அதைத் தொடர்ந்து தீபாராதனையும் நடந்தது. பின்பு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை