புதுமை முயற்சிகளுக்காக பார்க் நிறுவனத்துக்கு விருது
கோவை; ஒரு குறிப்பிட்ட துறையில் புதுமையான அல்லது முன்மாதிரியான முயற்சிகளை ஏற்றெடுத்து, வெற்றி கண்ட தனிநபர்கள் அல்லது அமைப்புகளை, 'டிரையல் பிளேசர்ஸ்' அமைப்பு விருது வழங்கி அங்கீகரிக்கிறது.சமீபத்தில் சாதனை வெற்றி பெற்ற, நம் நாட்டின் பெருமை மிகு சந்திரயான் - 3 திட்டத்தில் பார்க் கல்விக் குழுமத்தின் ஏரோநாட்டிக்கல் பொறியியல் துறையின் முன்னாள் மாணவர்கள் ஆறு பேர் பணியாற்றி இருந்தனர். இதற்காக, பார்க் கல்வி நிறுவனத்திற்கும், அந்த நிறுவனத்தை தலைமை தாங்கி வழி நடத்தும், முதன்மை செயல் அலுவலர் அனுஷா ரவிக்கும் விருது வழங்கப்பட்டது.இந்த விருதை, தமிழக பள்ளிக்கல்வி துறை அமைச்சர் மகேஷ் வழங்கினார். ''பார்க் கல்வி குழுமத்தின் உழைப்பிற்கும், மாணவர்களின் அறிவுத்திறனுக்கும் கிடைத்த வெற்றி இந்த விருது,'' என அனுஷா ரவி தெரிவித்தார்.