உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / குறுக்கும் நெடுக்குமாக வாகனங்கள் நிறுத்தம் அதிகரிக்கும் போக்குவரத்து நெரிசல்

குறுக்கும் நெடுக்குமாக வாகனங்கள் நிறுத்தம் அதிகரிக்கும் போக்குவரத்து நெரிசல்

பொள்ளாச்சி: பொள்ளாச்சி நகரில், போக்குவரத்துக்கு இடையூறாக, ஆங்காங்கே குறுக்கும் நெடுக்குமாக வாகனங்கள் நிறுத்துவதை கண்டறிந்து தடுக்க வேண்டும்.தமிழக - கேரள மாநிலம் எல்லையையொட்டி பொள்ளாச்சி நகர் அமைந்துள்ளது. இவ்வழித்தடத்தை மையப்படுத்தியே வால்பாறை, கொடைக்கானல், மூணாறு உள்ளிட்ட சுற்றுலா பகுதிகளுக்கும், பழநி, மதுரை உள்ளிட்ட வழிபாட்டு தலங்களுக்கும் அதிகப்படியான வாகனங்கள் இயக்கப்படுகின்றன.வெளி மாநிலங்கள், வெளிமாவட்டங்களில் இருந்தும், ஏராளமான வாகனங்கள் நகருக்குள் வந்து செல்கின்றன. இதனால், நகரில், வாகன இயக்கம், நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.ஆனால், பல இடங்களில், வாகனங்களை முறையாக நிறுத்தாமல், ரோட்டில் ஆங்காங்கே குறுக்கும் நெடுக்குமாக நிறுத்துவதை பலர் வாடிக்கையாகக் கொண்டுள்ளனர். இதனால், முக்கிய சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.குறிப்பாக, கோவை ரோடு, நியூ ஸ்கீம் ரோடு, மார்க்கெட் வீதி என பல்வேறு பகுதிகளில் இத்தகைய விதிமீறல் தொடர்கிறது.மக்கள் கூறியதாவது: சாலைகள் சந்திப்பு பகுதிகளில், சிக்னல் மற்றும் போலீசார் இல்லாமல், வாகனங்கள் தானாக திரும்பிச் செல்லும் வகையில், 'ரவுண்டானா' அமைக்கப்பட்டுள்ளது. அந்த ரவுண்டானா ஒட்டியும் குறுக்கும் நெடுக்குமாக வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன.குறிப்பாக, அரசு மருத்துவமனை அருகே, தேர்நிலையம் ரவுண்டானா பகுதிகளில், இத்தகைய விதிமீறல் காணப்படுகிறது. நகரில், வாகனங்கள் நிறுத்துமிடங்களை மேம்படுத்தவும், ஒழுங்குபடுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை